PUNITHA SANTHIYAGAPAR



புனித சந்தியாகப்பர் திருத்தல வரலாறு – மறவபட்டி






2015ம் ஆண்டு புனித சந்தியாகப்பர், புனித அந்தோணியார், செபஸ்த்தியார், அடைக்கல மாதா உள்ளிட்ட புனிதர்களுக்கு ஊர் மக்களால் விழா கொண்டாடபட்டது. அச்சமயம் விழா முடிந்து புனித சந்தியாகப்பர், புனித அந்தோணியார், செபஸ்த்தியார், அடைக்கல மாதா உள்ளிட்ட புனிதர்களின் சுரூபங்களை ஊர் மக்கள் தேரில் இருந்து இறக்கி புதிய அடைக்கல மாதா ஆலயத்திற்க்கு கொண்டு செல்லும் வழியில் மேனேஜர் ஞானையா புனித சந்தியாகப்பர் சுரூபத்தை கொண்டு செல்லும் போது பழைய அடைக்கல மாதா ஆலயம் இருந்த இடத்தை விட்டு அவரால் நகர முடியாமல் நின்று விட்டார். பின்பு சிறிது நேரம் கழித்து புதிய அடைக்கல மாதா ஆலயத்திற்க்கு புனிதர்களின் சுரூபங்கள் கொண்டு செல்லபட்டது.


அந்த காலகட்டத்திலேயே ஒருசில நீதிமான்களின் கனவில் புனித சந்தியாகப்பர் தோன்றி நான் புதிய அடைக்கல மாதா ஆலயத்தில் இல்லை பழைய தொன்மை வாய்ந்த அடைக்கல மாதா ஆலயம் இருந்த இடத்தில்தான் இருக்கிறேன் என்று கூறினார். இக்காரணங்களால் ஊர் மக்கள் கூடி பழைய அடைக்கல மாதா ஆலயம் இருந்த இடத்தில் புனித சந்தியாகப்பருக்கு உடனடியாக ஆலயம் அமைக்க முடிவு செய்யபட்டது. புனித சந்தியாகப்பர் ஆலய கட்டுமான பணி சுமார் ஒரு வருட காலத்திலேயே நிறைவடைந்து 28-01-2016 அன்று புனித சந்தியாகப்பர் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.

1 comment: